எச் ராஜாவை கைது செய்ய முடியாது-காவல்துறை கண்காணிப்பாளர்

0
76

எச் ராஜாவை கைது செய்ய முடியாது-காவல்துறை கண்காணிப்பாளர் | H Raja

கடந்த செப்டம்பர் 13 ம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று ஊர்வலம் செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எச் ராஜா கலந்து கொண்டார். அப்போது இந்த தடை குறித்து நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவமதிக்கும் வகையில் பேசி புது சர்ச்சையை ஏற்படுத்தினார்.

h raja
h raja

இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர் மற்றும் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதி மன்றம் தாமாகவே முன்வந்து எச் ராஜா மீது வழக்கு பதிவு செய்தது. வழக்கு நிலுவையில் இருந்தாலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற புதுகோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் சென்னை உயர் நீதிமன்றமே எச் ராஜா மீது வழக்கு பதிதுள்ளத்தால் நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.