ஜியோவுக்கு எதிராக ஆபர்களை கொடுத்த பிஎஸ்என்எல்.! அதுவும் எத்தனை ஜிபி தெரியுமா

0
35

ஜியோ வழங்கு அதிக சலுகைகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவங்களும் சலுகை வழங்குவதால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-லும் சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே இருந்து வந்த சலுகையை மீண்டும் நீடித்துள்ளது. ஆம், கடந்த செப்டம்பர் மாதம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.21GB கூடுதலாக கிடைக்கும் என அறிவித்தது.

இந்த சலுகை ஜனவரி 31 வரை மட்டுமே என முதலில் கூறியது. பின்னர் ஏப்ரல் 30 வரை நீட்டித்தது. இப்போது இதை ஜூன் 30 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.999, மற்றும் ரூ.1,699 ஆகிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்ட பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.