புதிய பஜாஜ் பல்சர் அறிமுகம்.. அதுவும் குறைந்த விலையில்.. தலையில் துண்டைப் போடும் டிவிஎஸ், ஹோண்ட!

0
164

மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் பல்சர் 150cc நியான்

பல முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் பஜாஜ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. பஜாஜ் அறிமுகப்படுத்தும் பலவிதமான பைக் தன்னுடைய போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளும் வண்ணமாக இருக்கும். அதிலும் முக்கியமாக 150CC பைக் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைக் தான் பஜாஜ் பல்சர் நியான்.

bike-pulsar-150cc
bike-pulsar-150cc

இந்த பைக்கின் முக்கியமான அம்சம் என்னவென்றால் 110CC பைக்குகளில் விலைக்கு நிகரான விலை தான் இந்த பைக். இதன் விலை 65 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது வந்துள்ள புதிய மாடல் 110CC ஸ்கூட்டர் அல்லது பைக்குகளில் விலையைவிட மிகக் குறைவானதாகும்.

பஜாஜ் நிறுவனம் இதை பற்றி கூறும்போது இந்த பைக் ரேஸ் பைக் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை எளிதில் ஓட்டக்கூடிய வகை மற்றும் அதன் செயல்திறன் 110CC மேல் வாகனம் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பல்சர் பைக் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.

Delhi – Rs 64,998, Mumbai – Rs 65,446, Pune – Rs 65,446, Bengaluru – Rs 66,086, Kolkata – Rs 66,240, Chennai – Rs 66,790