பிக்பாஸ் 3 ப்ரோமோ வீடியோவை இதைவிட யாராலையும் கலாய்க்க முடியாது.! வைரலாகும் வடிவேல் வெர்சன்.!

0
196

bigg boss 3 : கடந்த 2017-ம் ஆண்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அதிக பார்வையாளர்களைப் பெற்று பிரபலமானது. தொடர்ந்து கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 2017-ம் ஆண்டு ஆரவ் வெற்றியாளராகவும் 2018-ம் ஆண்டு நடிகை ரித்விகா வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதேபோல் இந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பிரபல ரிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.

தற்போது இந்த காணொளியினை நெட்டிசன்கள் கையில் எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியுள்ளனர். ஆம் பிக்பாஸ் 3 ப்ரொமோ காட்சி நெட்டிசன்களிடம் சிக்கி எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பதை தற்போது காணலாம்.