உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அதுவும் இந்தியாவில்.! எங்கு தெரியுமா?

0
115

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அதுவும் இந்தியாவில்.! எங்கு தெரியுமா?

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் வியாபாரம் மிகப் பெரியது உலக கோப்பைக்கு தயார் செய்யும் கிரிக்கெட் வீரர்களை விட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கு தயார் செய்யும் வீரர்கள் தான் அதிகம். ஏனென்றால் அதில் வரும் வருவாயை விட ஐபிஎல் கிரிக்கெட்டில் நடக்கும் விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம்.

cricket-ground-in-india
cricket-ground-in-india

உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானம் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் மட்டும் மொத்தம் 52 மைதானங்கள் உள்ளன. இதற்கு அடுத்து இங்கிலாந்திலுள்ள மைதானங்கள் எண்ணிக்கை 23.

இப்பொழுது அதெல்லாம் தாண்டி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய மைதானம் உருவாகிறது. அதுவும் உலகிலேயே மிகப் பெரிய மைதானம், இந்த மைதானத்தில் மொத்தம் 1.10 லட்சம் ரசிகர்கள் விளையாட்டுப் போட்டியை கண்டு மகிழலாம். இது மொத்தம் 63 ஏக்கர் கொண்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு 700 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மைதானம் விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இதனை எல் அண்ட் டி நிறுவனம் எடுத்துள்ளது. குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவர் பரிமல் நத்வானி தற்பொழுது அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் 53 ஆயிரம் பேர் போட்டியை கண்டு ரசிக்கலாம் இப்பொழுது அதனை விட இருமடங்கு பெரிதாக உருவாகி உள்ளது.