மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை பூமிகா.! எந்த நடிகர் படத்தில் தெரியுமா.!

0
51

சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்து சில நாட்கள் கழித்து, ஆல் அட்ரஸ் தெரியாமல் மறைந்து விடுவார்கள், அந்த வகையில் நடிகை பூமிகாவும் ஒருவர் தமிழில் இரண்டாயிரத்தில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன பத்ரி திரைப்படத்தில் பூமிகா நடித்திருந்தார்.

இவர் தெலுங்கு படத்தில் தான் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானார், ஆனால் தமிழில்தான் பிரபலமானார் பத்ரி படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல், ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார், இவருக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை என்றாலும் இதற்கு முன் தமிழ் மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார், 2007 ஆம் ஆண்டு தான் நீண்ட நாளாக காதலித்து வந்த பரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டாலும் நீண்டநாட்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நடித்து வந்தார் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு களவாடிய பொழுதுகள் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பல வருடங்கள் கழித்து நடித்திருந்ததால் அந்த படத்தில் பூமிகா இது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள்.

இந்த நிலையில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மாறன் இயக்கத்தில் தற்போது ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ‘சைக்கோ’ படத்தின் டப்பிங் பணிகளையும் துவங்க முடிவு செய்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.