‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரை விமர்சனம்.!

0
225

பணக்கார தொழிலதிபர் நாசரின் ஒரே மகன் அரவிந்தசாமி. அடிதடி, கட்டப்பஞ்சாயத்து தான் இவருக்கு முழுநேர தொழில். மனைவியை இழந்த அரவிந்தசாமிக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் படிக்கும் பள்ளியில் தான் கணவர் இல்லாத அமலாபால் மகள் ஷிவானியும் படிக்கின்றார்.

bhaskar oru raskal
bhaskar oru raskal

ஆகாஷ், ஷிவானி நண்பர்களாக மாற இந்த நட்பு அரவிந்தசாமி, அமலாபால் வரை நீடிக்கின்றது. இந்த நிலையில் ஆகாஷ் மற்றும் ஷிவானி ஆகியோர் அரவிந்தசாமியையும் அமலாபாலையும் இணைத்து வைத்து ஒரே குடும்பமாக வாழ விரும்புகின்றனர். இவர்களுடைய முயற்சி பலித்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்யும் நேரத்தில் திடீரென அமலாபாலின் கணவர் உயிருடன் வந்து நிற்கின்றார்.

அமலாபால் தனது கணவருடன் இணைந்தாரா அல்லது அரவிந்தசாமியுடன் இணைந்தாரா என்பதுதான் மீதிக்கதை. நீண்ட இடைவெளிக்கு பின் அமலாபால் கவர்ச்சியை ஓரம் கட்டிவிட்டு குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நடிப்பு குறைவுதான். ஆகாஷ் கேரக்டரில் நடித்திருக்கும் மாஸ்டர் ராகவன் நடிப்பு இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. ஆனால் நைனிகா நடிப்பு கொஞ்சம் ஓவராக உள்ளதால் சில இடங்களில் ரசிக்க முடியவில்லை.

bhaskar oru raskal1
bhaskar oru raskal

சூரி, ரோபோசங்கர், ரமேஷ்கண்ணா என மூன்று காமெடி நடிகர்கள் இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை. முதல் பாதியை ஜாலியாக கொண்டு சென்ற இயக்குனர், இரண்டாம் பாகத்தில் சொதப்பிவிட்டார். அம்ரேஷ் கணேசனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். மொத்தத்தில் முதல் பாதிக்காக மட்டும் ஓர் முறை பார்க்கலாம்.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ = 3 / 5