அஜித், பாலா பிரச்சினையில் நடந்தது என்ன.. ரூமில் மிரட்டப்பட்டாரா.. வெளிவந்த உண்மை

0
126

அஜித், பாலா பிரச்சினையில் நடந்தது என்ன.. ரூமில் மிரட்டப்பட்டாரா.. வெளிவந்த உண்மை

நான் கடவுள் படத்தில் அஜித் பாலா பிரச்சினை பற்றி எல்லோருக்கும் தெரியும் ஆனால் என்ன நடந்தது என்பது பற்றி மட்டும் யாருக்கும் தெரியாது. இத்தனை நாள் கழித்து அஜித் பாலா பிரச்சனையில் நடந்தது என்ன இதைப் பற்றிய செய்தியை ஒரு பத்திரிக்கையாளர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

ajith
ajith

பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் பாலா வழக்கம்போல் படம் ஆரம்பிப்பதாக தெரியவில்லை. அஜித்தும் அந்த கேப்பில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். ஆனால் பாலா கதை விவாதத்தில் மட்டுமே தொடங்குவதாக தெரியவில்லை.

இந்த செய்தியை பற்றி பாலாவிடம் அஜித் கேட்டாராம். அதற்கு ஒரு ரூமில் பஞ்சாயத்து நடந்து இருக்கிறது. அதில் மதுரை அன்புச்செழியன் அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் கூடவே இருந்திருக்கிறார்கள். அஜித்தும் தான் வாங்கிய முன்பணமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி விட்டார்.

பாலா அன்புச் செழியனிடம் பணத்தை வட்டிக்கு பெற்று அஜித்திற்கு முன்பணமாக ஒரு கோடி ரூபாயை கொடுத்திருந்தார். படத்தில் இருந்து அஜித் நீக்கப்பட்ட பின் அதற்கான வட்டி அனைத்தும் வீணாகப் போகும் எனவே அந்த வட்டியையும் அஜித்திடமே கறந்து விட வேண்டும் என்பது பாலாவின் நோக்கம்.

பெரும் வாக்குவாதத்திற்குப் பிறகு பிரச்சினைகள் வேண்டாம் என அஜித் ஒதுங்கிக் கொண்டார். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அந்த பணத்தை தருகிறேன் என்று கூறி ஒப்புக்கொண்டார். பாலா, அன்புச்செழியன் போன்றவர்களுக்கு ஆள் பலம் இருந்தாலும் அஜித்திற்கு அப்பவே பெரிய ரசிகர் பலம் இருந்தது.

அஜித் நினைத்திருந்தால் பிரச்சனையை பெரிதுபடுத்தி இருக்கலாம். பிரச்சனை வேண்டாம் என்று ஒதுங்கியதால் தான் இப்பொழுது மிகப்பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் அஜித். இனி பாலா நினைத்தாலும் அவரை நெருங்க முடியாது. இனி பாலாவுக்கு வாய்ப்பும் இருக்காது.

bala-nankadavul
bala-nankadavul

இதனை பாலாவே ஒருமுறை ஒப்புக்கொண்டார். ஆனந்தவிகடனில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு அன்று நான் தான் தவறு செய்துவிட்டேன். என்னுடைய சிறுபிள்ளைத்தனமான பிரச்சினை தான் காரணம். வருத்தம் இப்பொழுதும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் கவலைப்படவில்லை என்று கூறினார்.