siragadikka aasai next week promo

மீனாவை பிச்ச எடுக்க சொன்ன ஸ்ருதியின் அப்பா கன்னத்திலேயே நாலு அரை வைத்த முத்து.. வீட்டுக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பண்ணும் சுருதி

siragadikka aasai next week promo : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில்  ரோகினியின் அப்பா தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு வராததால் எப்படியாவது முத்துவை வைத்து பிரச்சனை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் என்னைப் பற்றி யாரும் கேட்க மாட்டார்கள் என ரோகிணி பிளான் பண்ணுகிறார் அதனால் ஒரு குடிகாரரை அழைத்து முத்துவை குடிக்க வைக்க பிளான் பண்ணுகிறார்.

இந்த சமயத்தில் முத்து கையில் கிளாசை வைத்துக்கொண்டு இங்கே நான் குடிச்சனா என் பொண்டாட்டிக்கு ஏதாவது பிரச்சனை ஆகும் என்னால் தான் பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க அதனால நான் குடிக்க மாட்டேன் என கையில் கிளாசை வைத்துக் கொண்டு நிற்கிறார் இதனை பார்த்துக் கொண்டிருந்த மீனா முத்துவை அழைத்து உள்ளே செல்கிறார்.

ஒரு வழியாக சரவணனுக்கு தங்கமயில் கிட்டியது!! ஆனா பொண்ணுக்கு தான் பிடிக்கல.. அடுத்தது என்ன நடக்குமோ..

ரோகினி நினைத்தது நிறைவேறவில்லை ஆனால் அதற்கு பதிலாக ஒரு பெரிய சம்பவம் நடந்தது அதாவது மீனா சுருதி மாலையை கழட்டி போட்டுள்ளதை பார்த்து மாலையை எடுத்து வைக்கப் போகிறார் அப்பொழுது அதில் செயின் இருப்பதை பார்த்துவிட்டு செயினை எடுத்து பத்திரமாக வைக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது ஸ்ருதியின் அப்பா மீனாவை பார்த்து ஸ்ருதி செயினை திருடுகிறாயா இப்படி, இப்படி தான் பங்க்ஷனில் திருடுவியா என பேசுகிறார்.

அதேபோல் விஜயாவும் ஏதோ வார்த்தையை விட மீனா அழுது கொண்டு முத்துவை கட்டி பிடிக்கிறார். உடனே அனைவரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது இப்படி திருடுவதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாமே இப்படி தான்  ஃபங்ஷன்ல திருடுவீங்களா என திட்டுகிறார் உடனே வேணாம் சார் விட்டுடுங்க என முத்து எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் ஆனால் வார்த்தை மிகவும் முக்தி ஓவராக பேசுவதால் முத்துவுக்கு கோவம் வந்து கன்னத்தில் நான்கு அறை விடுகிறார்.

கடைசிவரை கல்யாணம் பண்ணிக்காமல் வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி.. ஹீரோவாக நடித்ததிரைப்படம் எது தெரியுமா..?

எத்தனை பேர் தடுத்தாலும் நிறுத்தவில்லை உடனே முத்து கோபப்பட்டு யாராவது இவளை பத்தி பேசினா கொன்னு புதைச்சிடுவேன் என ஒட்டுமொத்த பேருக்கும் சொல்லிவிட்டு செல்கிறார். உடனே அண்ணாமலை சுருதியை  அழைத்துக்கொண்ட நீ வீட்டுக்கு வா என ரவி இடம் கூற சுருதி வர முடியாது என கூறுகிறார்  இத்துடன் அடுத்த வாரம் ப்ரோமோ முடிகிறது..