alyamanasa1

குழந்தை பெற்று சில மாதத்திற்குள் தளபதி விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் சீரியல் நடிகை ஆலியா மானசா.! ஆட்டம் காணும் இணையதளம்

alyamaansa dance video viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் சீரியல் நடிகை ஆலியா மானசா. பின்பு அதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத்தொடர்ந்து இவர்களுக்கு அய்லா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு விஜய் டிவியில் மீண்டும் ராஜா ராணி 2வில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் தற்போது விஜயின் ஒரு பாடலுக்கு சீரியலில் தன்னுடன் அன்னியாக நடிப்பவருடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிற வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்தத் திரைப்படத்தில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை கூட இப்படி ஆடியிருக்கமட்டார் என அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

 

nayanthara6

நயன்தாரா நடித்த விளம்பரத்தை பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

Lady super star nayanthara before cinema acted in this advertisement video viral:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது R J பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு நவம்பர் 14 அன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம்  முழுக்க முழுக்க  அம்மனைப் பற்றி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

ஆனால் வெளிவந்த ட்ரெய்லரை பார்த்தால் படத்தில் சமுகத்திற்கு நிறைய கருத்துகள் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்திருக்கும் என தெருகிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன் நடித்த விளம்பரம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

sembaruthi

கண்ணீருடன் செம்பருத்தி சீரியல் நடிகை.! வருத்தத்தில் ரசிகர்கள்

sembaruhti serial actress jannani ashokkumar cried video viral: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிக முக்கியமான சீரியல் செம்பருத்தி இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மருமகளாக நடித்து வருபவர் சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.

இந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் வில்லி போன்று நடித்து பின்பு நல்ல மருமகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் யூடியூப் சேனல் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் அழகு குறிப்புகளை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இப்படி இருக்கும் நிலையில் இவர் யூடியூபில் சேனலில் லைவ்வில் வந்து அழுது கொண்டே இனி செம்பருத்தி சீரியலில் நடிக்க போவதில்லை என்றும் மேலும் தன்னை சீரியலில் இருந்து தூக்கி விட்டதாகவும் அவருக்கு பதிலாக வேறொருவர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறி மிகவும் வருத்தப்பட்ட நிலையில்  அழுது கொண்டே பேசியுள்ளார்.

மேலும் இவர் ஏன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டார் என்ற காரணம் கூட தெரியவில்லை என்றும் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் வருந்தியுள்ளார்.

மேலும் இந்த சீரியலில் இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். இதோ அந்த வீடியோ.

biggboss-samyuktha

பிக்பாஸ் சம்யுக்தா சீரியலில் நடித்துள்ளாரா.! வைரலாகும் சீரியல் காட்சி

biggboss samyuktha karthik acted in sun tv serial with radhika sarathkumar video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தான் மாடலும், பிசினஸ் உமனுமான நடிகை சம்யுக்தா கார்த்திக்.

இவர் நடிகை ராதிகா சரத்குமார் உடன் இணைந்து சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியல் சன் டிவியில் மிக குறுகிய நாட்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு பின்பு  நிறுத்தப்பட்டது என தெரியவருகிறது. அதனை தொடர்ந்து இந்த சீரியல் சூர்யா டிவியில் ஒளிபரப்பானது என கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இதனால் ஆரியுடன் பல பிரச்சினைகள் ஏற்பட்டு தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த வீட்டில் நியாயமில்லை என கூறியும் கமல் கூறியபடி தான் ஒரு கை பொம்மையாக  இருந்து விட்டோமா எனவும் கேப்டனாக  இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும் கூறி வருகிறார்.

மேலும் இவர் நடித்த சீரியலிலிருந்து ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

peimama2

முன்னணி நடிகர், நடிகைகளை கலாய்த்துள்ள யோகிபாபுவின் பேய்மாமா திரைப்படத்தின் டிரைலர்!! வீடியோ இதோ..

actor yogi babu peymama trailer video: காமெடி நடிகர் யோகிபாபு பேய்மாமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவு யோகி பாபு அவர்கள் இந்த படத்தில்  அதிக வசனங்களுடன் கூடிய காமெடிகளை பேசி கலக்கியுள்ளார் . தெலுங்கு திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா,  மொட்டை ராஜேந்திரன், ரேகா, போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும்,  தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகப்போகிறேன் எனவும் டம்மி  பிஸ்தான்  காமெடி பீஸ் தான் ஹீரோ கிடையாது, எனக்குப் பேய் பிடித்திருக்கிறது போன்ற பல காமெடி வசனங்களை பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினி, விஜய் போன்றவர்கள் கிண்டலடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுக்கு கோலி  எனப்  பெயர் வைத்துள்ளனர். எனவே பாக்கத்தான போறிங்க  இந்த காளியோட ஆட்டத்தை என்ற வசனமும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என தெரியவருகிறது. இந்தப் படத்தின் டிரைலரே அசத்துதே  என கூறும் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/yogibabu_offl/status/1324709024512708608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1324709024512708608%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fyogibabu-in-peimama-trailer-release-tamilfont-news-273468