மாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “அசுரன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

0
120

மாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “அசுரன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

பாலாஜி மோகனின் ‘மாரி 2′ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் படம், ராம்குமார் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார்.

asuran
asuran

இதில் வெற்றிமாறன் இயக்கி வரும் படம் ‘வெக்கை’ என்ற நாவலின் தழுவலாம். இந்த படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, இப்படத்திற்கு ‘அசுரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ஷேரிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.