ரவுடி பேபி பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆர்யா சாயிஷா.! வைரலாகும் வீடியோ.!

0
201

Arya Sayyesha marriage video : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 38 வயதாகும் ஆர்யாவுக்கு பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி சாயிஷா ஷைகளுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வன மகன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

பிறகு காதலர் தினத்தன்று இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி மெகந்தி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என அத்தனையம் கோலாகலமாக நடந்தது.

நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஆதித்ய பஞ்சோளி மற்றும் உறவினர்கள் மற்றும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் என ஒட்டுமொத்த சினிமா நட்சத்திரங்களும் ஒன்றுகூடி மணமக்களை வாழ்த்தினார்கள்.