நடுரோட்டில் படுத்துக்கிடக்கும் ஆர்யா? என்ன ஆனது

0
168

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில், நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடுவதாக கூறி, கடைசிவரை யாரையும் தேர்வு செய்யாததால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

arya
arya

இந்நிலையில், சைக்கிள் ஓட்டுவதில் மிகவும் ஆர்வமுடையவரான ஆர்யா, தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் 200 கிமீ சைக்கிளிங் சென்றுள்ளார். அப்போது, சாலையில் சைக்கிள் ஒருபுறம் கிடக்க, அவர் ஒருபுறம் படுத்துக்கொண்டிருப்பது போன்ற படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியடைய, பின்னர், அவர் வேடிக்கையாக அதை செய்துள்ளார் என்பதை அறிந்து அவரை கோபமாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.