துருவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துகொள்கிறேன்.! பாலாவின் அதிகாரபூர்வ அதிரடி அறிக்கை

0
61

துருவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துகொள்கிறேன்.! பாலாவின் அதிகாரபூர்வ அதிரடி அறிக்கை

தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. துருவ் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் வர்மாவாக மாறியது. பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

varma
varma

இந்நிலையில் இணையத்தில் சமீபத்தில் அறிக்கை வெளியினர் இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் . பாலா படம் சரியாக எடுக்காதது போன்ற பேச்சு தான் சில நாட்களாக பரவி வந்தது.இந்நிலையில் பாலா இன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் அறிக்கை வாயிலாக மற்றும் ஒப்பந்தத்தின் நகலையும் வெளியிட்டுளார்.

“என்னை பற்றி தவறான தகவலை தயாரிப்பாளர் பரப்பியதால் விளக்கம் அளிக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. எனது படைப்பின் சுதந்திரத்தை நினைவில் கொண்டு நானாக தான் இந்த ப்ரொஜெக்டை விட்டு வெளியேறுகிறேன்.

varma
varma

நான் தயாரிப்பாளரிடம் 22 ஆம் தேதி போட்ட ஒப்பந்தம் இணைத்துள்ளேன். துருவின் எதிராக்காலத்தை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கிறேன். ” எனபதே அந்த அறிக்கை.

விக்ரம் முன்னிலையில் தான் இது அனைத்தும் நடந்தது எனவும் தெளிவாக உள்ளது இதில்.அந்த ஒப்பந்தத்தில் ஈ 4 நிறுவனத்துக்கு பைனல் காபி ஏற்கத்தக்கதாக இல்லை, அதில் மாறுதல் செய்ய பாலா சம்மதிக்கவில்லை. நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் மாறுதல் செய்துக்கலாம்.

varma
varma

ஆனந்த் சினி கிரேஷன்ஸுக்கு மட்டும் மீதி தொகை 34 லட்சம் கொடுங்க, எங்கள் பணம் வேண்டாம்.இனி இந்த படம் சம்பந்தம் பட்ட எதிலும் பாலாவின் பெயர் வரக்கூடாது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார் பாலா.