ஏர்டெல் ஸ்டோரில் ஐபோன் முன்பதிவு

0
117

ஏர்டெல் ஸ்டோரில் ஐபோன் முன்பதிவு | Apple iPhone Pre Booking in Airtel Website

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்தது.

இந்த ஐபோன் கூடிய விரைவில் ஏர்டெல் தலத்தில் விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் செப்டம்பர் 21 ஆம் தேதியும், ஐபோன் XR மாடலின் முன்பதிவு அக்டோபர் 19-ம் தேதியும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் XS 64 ஜிபி ரூ.99,900, ஐபோன் XS மேக்ஸ் 64 ஜிபி ரூ.1,.09,900, ஐபோன் XR 64 ஜிபி ரூ.76,900 என்ற விலையில் துவங்கும் என தெரிகிறது. முன்பதிவிற்கு இன்னும் சில நாட்கல் உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஏதேனும் சலுகைகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.