விஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன் பிரபல நடிகை.! நடக்குமா.?

0
135

anjali : ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, உடல் எடை அதிகரித்துவிட்டால் சினிமாவை விட்டு ஒதுக்கி விடுவார்கள் என்பதால் டயட்ஸ் மற்றும் தீவிர உடற்பயிற்சி மூலம் மீண்டும் ஸ்லிம்மாகி உள்ளார்.

இந்த நேரத்தில், ஜெய்யை நான் காதலித்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். அவரை காதலிப்பதாக எப்போது யாரிடம் நான் சொன்னேன்? என்று கேள்வி எழுப்பும் அஞ்சலிக்கு விஜய்யுடன் இதுவரை நடிக்காதது பெரிய வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, நான் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தபோது தமிழ் சுத்தமாக தெரியாது. அப்போது நான்பார்த்த முதல் படம் விஜய் நடித்த ஷாஜகான் படம். அதிலிருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகையாகிவிட்டேன். அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

anjali
anjali