விநாயகர் புகைப்படம் டாய்லெட்டில்.! அமேசன் கிளப்பும் சர்ச்சை

0
43

அமேசான் இணையதளத்தில் இந்துக் கடவுளான பிள்ளையார் படம் பொறித்த காலடிகள் மற்றும் மேட்கள் விற்பனை செய்யப்படுவதை அடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த் நிறுவனத்தின் இணையதளத்தில் கழிவறைகளில் பயன்படுத்தப்படும் கவர்கள், காலணிகள், வாசலில் பயன்படுத்தப்படும் மேட் உள்ளிட்ட பொருட்களில் பிள்ளையார் படங்களைப் பயன்படுத்தியதன் மூலம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய மக்கள் அமேசான் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மேலும் சிலர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்திற்கும் இதைக் கொண்டு சென்றுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதெப்போல இந்திய தேசியக் கொடியை மேட்கள் மற்றும் காலடிகளில் பொறித்து அமேசான் விற்பனை செய்ததை அடுத்து சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை நீக்க செய்தார். அதன்பிறகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் அமேசான் மீது இந்து மத அபிமானிகள் கோபமடைந்துள்ளனர்.

amazon
amazon
amazon
amazon
amazon
amazon