உலக அளவில் கலக்கும் அஜித்… மிரண்டுபோன ஜெர்மன்!

0
115

உலக அளவில் கலக்கும் அஜித்… மிரண்டுபோன ஜெர்மன்!

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல், புகைப்படம் எடுப்பது, கார் பந்தயங்களில் ஈடுபடுவது, ஆளில்லா விமானங்களை தயாரித்து பறக்க விடுவது என பல விஷயங்களில் ஆர்வமுள்ளவர். எம்.ஐ.டி கேம்பஸில் பையிலும் ஏரோநாட்டிக்கல் மாணவர்கள், விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர்.

ajith
ajith

அதற்கு அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அஜித்தின் வழிகாட்டுதலில் ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்நிலையில், வேரியோ ஹெலிகாப்டர் எனும் ஜெர்மன் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அஜித்தை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “காலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மாலையில் எங்கள் அலுவலகம் வந்து சில நாட்கள் அஜித் ஆலோசனையில் ஈடுபடுவர். ஆளில்லா விமானங்களை தயாரிப்பதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம். அவர் கொடுத்த சில ஐடியாக்கள் எங்களுக்கு பிடித்திருந்தது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ajith-gernam-post
ajith-gernam-post