அஜித் வெங்கட் பிரபு இணைந்து படம் எடுத்தால் இனி ஓடாது.! ரசிகரின் பதிவிற்கு சரியான பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

0
61

ajith : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிடம் மீண்டும் அஜித் – வெங்கட் கூட்டணி எப்போ என கேள்வி எழுப்பினர். அதற்கு மற்றொரு ரசிகர் “திரும்ப வெங்கட் பிரபு எடுத்தா அது நிச்சயமாக பிளாப் ஆகும்னு வெங்கட் பிரபுவுக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபு கிட்ட ஒழுங்கான கதை இல்லை” என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் வெங்கட் பிரபு, “வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன். என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு” என்று அந்த ரசிகருக்கு நக்கலான பதிலடி கொடுத்துள்ளார்.