அஜித்துடன் ரவுண்டு கட்டி மோத இருக்கும் சிவகார்த்திகேயன்.!

0
78

அஜித்துடன் ரவுண்டு கட்டி மோத இருக்கும் சிவகார்த்திகேயன்.!

அஜீத்தின் பிங்க் திரைப்பட ரீமேக் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவகாா்த்திகேயனின் மிஸ்டா் லோக்கல் படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளது.

sivakarthikeyan
sivakarthikeyan

சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டா் லோக்கல் திரைப்படம் வருகின்ற மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீமராஜா படத்தைத் தொடா்ந்து நடிகா் சிவகாா்த்திகேயன் மிஸ்டா் லோக்கல் படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தில் நயன்தாரா சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாா். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமாா், சதீஷ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனா்.

ஹிப் ஹாப் ஆதி இசையில், கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் காமெடி என்டொ்டெய்னராக உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் வருகின்றன மே 1ம் தேதி உழைப்பாளா் தினத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக அஜீத் குமாரின் பிங்க் திரைப்பட ரீமேக் மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது உழைப்பாளா் தின வரிசையில் சிவகாா்த்திகேயனின் மிஸ்டா் லோக்கல் திரைப்படமும் இணைந்துள்ளது.