அஜித் நடிப்பதாக சொல்லப்படும் பிங்க் படத்தின் மெஸேஜ் இது தான். இப்ப சொல்லுங்க கெத்து தானே படம் ?

0
148

அஜித் நடிப்பதாக சொல்லப்படும் பிங்க் படத்தின் மெஸேஜ் இது தான். இப்ப சொல்லுங்க கெத்து தானே படம் ?

கடந்த சில நாட்களாக்கவே நம் கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படும் விஷயம் பாலிவுட் படமான பிங்க் இன் ரிமேக் தான். பிங்க் ஒரிஜினல் வெர்ஷன் சோஷியல் மெசேஜ் சொல்லும் டிராமா வகை ஜானர். U / A சென்சார் சான்றிதழ் பெற்ற படம். சுமார் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல மல்ட்டிப்ளெக்ஸ்களில் படம் 50 நாட்களை கடந்து ஓடியது.

pink-movie-review-and-rating
pink-movie-review-and-rating

இரவின் நிசப்தத்தில் இரண்டு கார்கள் வெவ்வேறு திசைகளில் விரைவதில் தொடங்குகிறது படம். முதல் காரில் மூன்று பெண்கள் ஒருவித பதற்றத்துடன், அழுதுகொண்டே விரைந்து கொண்டிருக்கின்றனர். மற்றொன்றில் குடிபோதையில் நண்பர்கள், ஒருவரின் மண்டையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனை செல்கின்றனர், சிகிச்சை முடிகிறது ’போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம்’ என கூறி இடத்தை காலி செய்கின்றனர்.

பார்ட்டி ஒன்றில் ஏற்படும் தகராறு. அரசியல் பின்புலமிக்க பணக்கார வீட்டு ஆண்கள், தனியாக வீடு எடுத்து தங்கம் பெண்கள். அந்த பெண்களின் அபார்ட்மென்டுக்கு எதிரில் இருக்கும் வீட்டில் தன் உடல் நிலை சரியில்லாத மனைவியுடன் அமிதாப்.

சம்பவம் முடிந்த பின் பெண்களுக்கு மிரட்டல் கொடுக்கிறார்கள் அந்த வாலிபர்கள். ஒரு பெண்ணிற்கு வேலை போகிறது, ஒருவரை முரட்டு ஆசாமிகள் பின் தொடர்க்கின்றனர். ஓனர் வீட்டை காலி செய் சொல்கிறார். ஒரு பெண்ணை காரில் தூங்குகின்றனர். மிரட்டப்படுகிறாள், பாலியல் தொல்லையும் கூட, பின் ரோட்டில் வேசி வீட்டு செல்கின்றனர். பதற்றத்தோடு அமிதாப் காவல்துறைக்கு பேசுகிறார், பதில் இல்லை.

ஹீரோயின் போலீஸில் புகார் கொடுக்கிறார், விளைவு போலீஸ் அவளையே வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறது, கொலை செய்யும் முயற்சி என கேஸ் பதிவிடுகின்றனர் . பணத்தை பெற்ற போலீஸ் மூன்று பெண்கள் விலைமாதுக்களாக சித்தரிக்கின்றனர் . பணம் கொடுக்க ல் வாங்கலில் பிரச்னை என கதை கட்டுகிறது. கேஸ் மீடியா சேங்ஷன் ஆகிறது.

வக்கீல்கள் அனைவரும் பேக் அடிக்கும் நிலையில், ஓய்வில் இருந்து வெளிவந்து தானே கேஸ் நடத்த முடிவெடுக்கிறார் அமிதாப். இரண்டாம் பாதியில் கோர்ட் காட்சிகளே அதிகம், விவாதம் ஆதாரம் என செல்லும் படம். பார்வையாளனாக இருக்கும் நம்மையும் திரைக்குள் இழுத்துப் போகும் வல்லமை உடைய படம்.

ஆதாரம் இருக்கிறதா என நீதிபதி கேட்கும் பொழுது, கடுப்பாகும் அமிதாப், விர்ஜின் பெண்ணா நீ என்று கேட்பது, பெண் முடியாது என்று சொல்லும் பொழுது கணவனுக்கே உடலுறவுக்கு கட்டாயப்படுத்த உரிமை இல்லை என்று பேசுவதெல்லாம் டாப் க்ளாஸ்.

இன்றைய சூழலில் இப்படம் ஒரு விழிப்புணர்வு பாடம் தான். மாஸ் ஹீரோ, கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். விசுவாசம் மோஷன் போஸ்டர் எந்த அறிவிப்பும் இன்றி வந்து, பல ரெக்கார்டுகளை தகர்த்து வருகின்றது. இந்நிலையில் மாஸ் ஹீரோ கதாபாத்திரத்தை மட்டும் நம்பி க்ளாஸ் ஹீரோ அவதாரம் எடுக்கப்போகிறார். இதனை அவர் ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியாது.

சம அளவில் அணைத்து சென்டரிலும் ரசிகர்களை பெற்றவர் தல அஜித். எனினும் இது போன்ற படம் சி சென்டர் ரசிகர்களை கவருமா என்பது கேள்வி குறி தான். ஆனால் படம் செல்வதோ “சதுரங்க வேட்டை” புகழ் வினோத் வசம். எனவே பாமரனுக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திறன் உடையவர். உதயநிதி நடிப்பில் மனிதன் படம் அணைத்து சென்டர்களில் பாராட்டப்பட்ட ஒன்றே. தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல கரு உள்ள படத்தை ஏற்றுக்கொள்வார்கள், எனவே படமும், அதில் உள்ள மெசேஜும் நல்ல ரீச் தான் ஆகும்.

சில நாட்களாகவே அஜித்துக்கும் நெருங்கிய வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படும் ஒரு விஷயம். அஜித்தின் பட சாய்சில் நிகழும் மாற்றம் தான். அவரின் மகள் வளர்ந்து வரும் வேலையில், இன்னமும் ரோமனாஸ், டுயூட் என நடிக்க அவர் தயங்குவதாக தான். சிவாவிற்காக தான் இந்தளவு மதுரை மாஸ் படம் விசுவாசம் பண்ணுகிறார் என்றும் சொல்கின்றனர்.

Thala-Ajith-Shalin-iFamily-Photo-1
Thala-Ajith-Shalin-iFamily-Photo-1

இந்த படம் டேக் ஆப் ஆகும் பாதிக்கத்தில் இனிமேல் தல அஜித் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றே தோன்றுகிறது. இது சாத்தியமா என்றால் கட்டாயம் சாத்தியமே. ஒரு முடிவு எடுத்தால் அதனை செய்து முடிப்பவர் அஜித், அப்படி தானே ரசிகர் மன்றங்களை கலைத்தார்.

ஆகமொத்தத்தில் இப்படத்தில் இருந்து சினிமா ரசிகர்கள் பார்க்கப்போவது தல அஜித்குமார் 2.0 தான். வாழ்த்துக்கள் தல சார்.