அடுத்தடுத்து 4 படமும் இவருக்கா.? இடையில் ஒரு படம் மட்டும் வேற அஜித்தின் மாஸ்டர் பிளான்

0
257

ajith : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.  இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் அவர்தான் தயாரிக்கிறார்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நேர்கொண்ட பார்வையையும் சேர்த்து அஜித்தின் அடுத்த நான்கு படத்தையும் இவரேதான் தயாரிக்க உள்ளாராம். இடையில் ஒரு படத்தை மட்டும் வேறு ஏதேனும் நிறுவனம் தயாரிக்குமாம்.