மீண்டும் வில்லன் கதாபாத்திரமா.? அஜித் மிஸ் செய்த திரைப்படம்.!

0
153

மீண்டும் வில்லன் கதாபாத்திரமா.? அஜித் மிஸ் செய்த திரைப்படம்.!

தல அஜித்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது, இவர் திரைப்படம் திரைக்கு வந்தால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும், ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாய் இருக்கிறார், இவர் நடித்த விஸ்வாசம் படம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

Ajith
Ajith

அதேபோல் நடிகர் அஜித் தனக்கு இருந்த மிகப்பெரிய ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார் ரசிகர்களின் நலனுக்காக, தற்பொழுது தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கிறார், அதேபோல் தற்போது அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படம்  இணையதளத்தில் வெளியாகி வருகிறது இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு செய்தி இணையதளங்களில் படும் வேகமாக பரவி வருகிறது, ஆம் அஜித் வில்லன் வேடத்தில் நடிக்க முடியாது என கூறிய படத்தை பற்றிய செய்திதான் அது, சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் அஜய் கபூர் இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, ஊட்டி என்ற படத்தில் முரளி அவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது முதலில் அவருக்கு நண்பனாக நடிக்க தான் அழைத்தார்கள், அதன்பின்பு வில்லன் வேடத்துக்கு தேர்வு செய்தாற்கள்.

ஆனால் அந்த வில்லன் வேடத்திற்கு முதலில் அஜீத் தான் நடிக்க இருந்தது அந்த நேரத்தில் வாலி படம் நடித்திருந்ததால் மீண்டும் வில்லன் வேடம் வேண்டாம் என கூறிவிட்டார் அதன் பிறகுதான் அஜய் கபூருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.