அஜித்துடன் தைரியமாக மோத இருக்கும் ஜீவா.! என்ன திரைப்படம் தெரியுமா.?

0
112

AJith and Jiiva : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் அஜித்தின் அடுத்த படத்தையும் அவர்தான் இயக்குகிறார்.

இன்னும் இயக்குநர் யார் என்ன கதை என்பது முடிவாகாமலேயே இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையில் அதே நாளில் தற்போது ஜீவா நடிக்கும் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜீவா, இந்தியில் 83 என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

கபில் தேவ் தலமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும்.இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில் தேவ் வேடத்தில் நாயகனாகவும் ஜீவா அவரது அணியில் விளையாடும் மற்றொரு வீரராகவும் களமிறங்குகின்றனர்.

இதுவொரு இந்தி படம் அதுவும் இந்தியில் ரன்வீர் சிங்கிற்கு இருக்கும் மார்கெட்டை மனதில் கொண்டு இப்படத்தை அஜித் படம் வெளியாகும் அதேநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இப்படம் அதே பெயரில் தமிழிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.