தல பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன பிரபல இயக்குனர்.! வியப்பில் தல ரசிகரகள்

0
275

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித் இவர் தற்பொழுது விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார், தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வருவதால் படபிடிப்பு இன்னும் தொடங்காமல் இருக்கிறது படபிடிப்பு எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிரார்கள்.

ajithkumar_tamil360news
ajithkumar_tamil360news

தற்பொழுது தல ரசிகர்கள் தல பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட இருக்கிறார்கள் அதற்காக முன்கூட்டியே பல திட்டங்கள் போடா ஆரம்பித்துவிட்டார்கள் சில ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.

இந்த நிலையில் தல அஜித்தின் பிறந்தநாளுக்காக முதல் ஆளாக தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் மற்றும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த நடிகர் அஜித் தான் அவர் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என கூறினார்.

தளபதி விஜய் தந்தை இப்படி கூறியுள்ளது தல ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது மேலும் தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தல ரசிகர்கள் எஸ்.ஏ.சி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.