அடி தூள்..! – மீண்டும் சேரும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த கூட்டணி..! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
110

அடி தூள்..! – மீண்டும் சேரும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த கூட்டணி..! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் தீம் மியுசிக் என்பதை ‘பில்லா’ படத்தின் மூலம் இன்றைய தலைமுறைக்கு பரப்பியவர் யுவன் ஷங்கர் ராஜா. அந்தப் படத்தில் அஜித்திற்காக அவர் அமைத்த தீம் மியூசிக், அடுத்து ‘மங்காத்தா’ படத்திற்காக அவர் அமைத்த தீம் மியூசிக் ஆகியவை இப்போதும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

ajith
ajith

‘ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை. அடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வினோத் இயக்க, அஜித் நாயகனாக நடிக்க உள்ள ‘பிங்க் படத்தின் ரீமேக்கிற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், யுவன் கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றவை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது இருவரது ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாகவே இருக்கும்.