இறந்து போன சுறாவுக்கு பிரசவம் பார்த்த மீனவர் வைரல் வீடியோ.!

0
227

ஆஸ்திரேலியாவில் உள்ள மீனவர் இறந்து போன சுறா மீனின் வயிற்றில் இருந்து 92 குட்டி சுறாக்களை வெளியே எடுத்துள்ளார், அந்த மீனவர் வழக்கம் போல் விக்டோரியா கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது சுறாக்களால் தாக்கப்பட்டு இறந்து போன சுறா ஓன்று அவரின் போட்டில் மோதியது அதை கண்ட மீனவர் சுறாவின் வயிற்றில் துடிப்பு இருப்பதை அறிந்தார். அதனால் சுறாவை போட்டிலே அதன் வயிற்றை கிழித்து பார்த்தார் அதில் 92 குட்டி சுறாக்கள் இருந்துள்ளது அதை அப்படியே கடலில் விட்டுவிட்டார்,

இதை பற்றி அந்த மீனவர் கூறியதாவது எனக்கு கடல் வாழ் உயிரினம் என்றால் மிகவும் பிடிக்கும் ஏன் என்றால் சுற்று சூழல் பாதுகாப்புக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது, நான் இதற்க்கு முன் இப்படி செய்தது இல்லை இதுதான் முதல் முறை என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.