2019 உலககோப்பைக்கு பிறகு ஓய்வு பெற இருக்கும் வீரர்கள்.!

0
143

2019 உலககோப்பைக்கு பிறகு ஓய்வு பெற இருக்கும் வீரர்கள்.!

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியஅணி.

உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்திக்கிறது. இதற்கு முன் ஜூன் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது.

ஏனென்றால் 2019ம் ஆண்டு ஐபில் போட்டி முடிவதற்கும் அடுத்த தொடர் தொடங்குவதற்கும் இடையே வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவை என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்திய அணிக்கு 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்பதால், ஜூன் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி ஆட்டம் இருந்தால் அது சரியாக வராது என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், போட்டி ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம், ஜூன் 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. வழக்கமாக இந்தியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் வகையில்தான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது.

கிறிஸ் கெய்ல்

உலகின் அசுரத்தனமான இருபது ஒவர் பேட்ஸ்மேனான இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் ஆடி வருகிறார். டி20 கிரிக்கெட்டின் வரவிற்கு பிறகு தனது சர்வதேச அணிக்கு ஆடுவதை பெரும்பாலும் கைவிட்டுவிட்டு உலகில் உள்ள லீக் தொடர்களில் ஆடி வந்தார். தற்போது வரை 20 ஓவர் போட்டிகளில் மட்டும் 10,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆடும் இவர் 2019 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார். என்று தெரிகிறது இவருக்கு தற்போது 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Chris-Gayle-west-indies
Chris-Gayle-west-indies

ஹசிம் அம்லா

தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பேட்ஸ்மேன் ஹாஷிம் அம்லா தற்போது அந்த அணியின் முக்கிய வீரராக உள்ளார். அதிவேகமாக 2000, 3000 ,4000, 5000, 6000, 7 ஆயிரம் ரன்களை குவித்தவர். தற்போது வரை 27 சதங்கள் விளாசியுள்ளார். இந்த வருடத்துடன் அவருக்கு 37 வயதாகிறது இதன் காரணமாக அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறலாம்

hashim-amla
hashim-amla

லசித் மலிங்கா

உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான இலங்கை வீரர் லசித் மலிங்கா 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவேன் என முன்னரே அறிவித்துள்ளார். இந்த வருட உலக கோப்பை தொடர் உடன் அவருக்கு 37 வயது ஆகி விடும் இதன் காரணமாக அவர் தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று தெரிகிறது.

malinga
malinga

ராஸ் டெய்லர்

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் ஆடிவருகிறார் தற்போது வரை ஏழாயிரம் ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை தொடரில் மட்டும் 23 போட்டிகளில் 652 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை தொடர் முடியும் போது அவருக்கு 36 வயதாகிவிடும் வயது காரணமாக அவரும் அதனுடன் ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது.

ross-taylor
ross-taylor

எம்.ஸ் தோனி

எப்போது வருவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வீரர்களில் தோனியும் ஒருவர் இவர். கண்டிப்பாக 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்று பலமுறை கூறியுள்ளார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. இருந்தாலும் இன்னும் இளம் வீரர்களை போல் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் அவர் அற்புதமான கிரிக்கெட் ஆடிவருகிறார். 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற்று விடுவார்.

dhoni
dhoni