மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.

0
34

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ள மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதற்காக அதிமுக, திமுக தலைமையில் இருபெரும் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் இதோ  அம்மா தேசிய வறுமை ஒழிப்பித்திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித்தொகை ரூ. 1500 வழங்கப்படும் வழங்க மத்தியரசை வலியுறுத்தப்படும்.

1.கைவிடப்பட்ட பெண்கள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும். 2. மதம் மாறினாலும் சாதிரீதியிலான இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் நடவடிக்கை. 3.இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும்.

4.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுக்க நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவரை வலியுறுத்தப்படும். 5.பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என மத்தியரசை வலியுறுத்தப்படும் 6.தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

7.காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக்க அறிவிக்க நடைக்கை எடுக்கப்படும். 8.எம்.ஜி.ஆர் திறன் வளர்ச்சி திட்டத்தில் மூலமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 9.புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

10.நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 11.கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.