மொபைல் நம்பர் இணைக்கா விட்டால் இன்டர்நெட் பேங்க் முடக்கம் – SBI அறிவிப்பு.!

0
94

மொபைல் நம்பர் இணைக்கா விட்டால் இன்டர்நெட் பேங்க் முடக்கம் – SBI அறிவிப்பு.!

வங்கி கணக்குடன் மொபைல் நம்பர் இணைக்கா விட்டால் இன்டர்நெட் பேங்க் முடக்கப்படும் என SBI வங்கி அறிவித்துள்ளது.

SBI
SBI

வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையில் மொபைல் எண்ணை அளிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

இதனை வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

தங்கள் கணக்கில் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை இன்டர்நெட் வங்கியில் உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் மொபைல் எண்ணை இணைக்கா விட்டால் அவர்களுக்கான இன்டர்நெட் வங்கி சேவை அனைத்தும் வரும் டிசம்பர் 1 – ஆம் தேதி முதல் முடக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.