விஸ்வாசம் – வாய்ப்பு கிடைத்தது எப்படி..? – நடிகர் போஸ் ஆச்சரியமான பதில்

0
285

நடிகர் போஸ் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், என்ன கதாபாத்திரம் என்ற விபரமெல்லாம் இப்போது இல்லை. இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எனக்கு கிடைத்தை சிறப்பான கதாபாத்திரம் மற்றும் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த ரீச் தான் எனக்கு விஸ்வாசம் படத்தின் வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது.

வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது, அஜித் சாரை பார்க்கவேண்டும் என சிவா சாரிடம் கேட்டிருந்தேன். அவரும், அஜித் சாரை மீட் பண்ணுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். கிட்டதட்ட முக்கால் மணி நேரம் நானும் அஜித் சாரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, என்ன வாய்ஸ் உங்களுது..! என்று ஆச்சரியமாக கேட்டார் அஜித் சார். மேலும், சிவாவிடம் ஏன் இன்னும் போஸை நம்ம படத்தில் நடிக்க வைக்கவே இல்ல..? என்று கேட்டார்.

அதன் பிறகு, விவேகம் படம் எடுத்தார்கள் எந்த படத்தில் நான் நடிப்பது சில காரணங்களால் மிஸ் ஆகிவிட்டது. இப்போது, விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அஜித் சாருடன் சேர்ந்து நடிக்க ஆவலுடன் உள்ளேன். வீரம் படத்தில் என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னதை மறக்காமல் விஸ்வாசம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் அஜித் என வியந்துள்ளார் போஸ்.