அணிக்கு திரும்ப வருவதாகக் கூறிய டிவில்லியர்ஸ்.! தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிர்ச்சி முடிவு

0
189

தென் ஆப்பிரிக்க அணி நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளையும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பங்களாதேஷ், இந்தியா ஆகிய 3 அணிகளிடமும் வரிசையாக தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதிக் கனவு மங்கலாகியுள்ளது.

வழக்கமாக சர்வதேச தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் தென் ஆப்பிரிக்கா சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.

இதற்கு அந்த அணியின் வீரர்கள் பலர் காயமடைந்தது உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நட்சத்திர பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இல்லாதது முக்கியமானக் காரணமாகும். கடந்த முறை தென் ஆப்பிரிக்கா அணிக்குக் கேப்டனாக செயல்பட்ட அவர் அணியை அரை இறுதி வரை சிறப்பாக வழிநடத்தினார்.

ஆனால் கடந்த ஆண்டு அதிர்ச்சியளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலகக் கிரிக்கெட் ரசிகர்களிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவர், ஐபிஎல், பிசிஎல் உள்ளிட்ட பல டொமஸ்டிக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் அவர் மேல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புவதாக கேப்டன் டூ பிளஸ்சி மூலமாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது முடிவை அந்நாட்டு கிரிக்கெட் பரிசீலிக்கமாலேயே வாரியம் நிராகர்த்துள்ளது.