திண்டிவனம் அருகே 75 வயது பாட்டியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

0
88

திண்டிவனம் அருகே 75 வயது பாட்டியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது | A Young Man Harassed a 75 Year Old Lady in Tindivanam

திண்டிவனம் மேல்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சியம்மாள்(75). மீனாட்சியம்மாளின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

A Young Man Harassed a 75 Year Old Lady in Tindivanam
A Young Man Harassed a 75 Year Old Lady in Tindivanam

இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் திடீரென மீனாட்சியம்மாளின் மீது பாய்ந்து கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் என்ன செய்வதுயென்று தெரியாமல் அவர் கூச்சலிட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த முரட்டு காமுகனை அடித்து துவைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் அந்த அயோக்கினை விசாரித்ததில் அவன் திண்டிவனம் அடுத்த விழுக்கம் காலனியை சேர்ந்த முருகன்(35) என்பது தெரியவந்தது. தாய் வயதுடைய பெண்மணியிடம் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்ட இவனுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.