“தி வேர்ல்ட் பெஸ்ட்” ஒரு தமிழ் சிறுவன்!! குவியும் பாராட்டுகள்…

0
51

“தி வேர்ல்ட் பெஸ்ட்” ஒரு தமிழ் சிறுவன்!! குவியும் பாராட்டுகள்…

சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற 13 வயது சிறுவன், அசாத்திய திறமை கொண்டவர். உலகில் சாதித்த பல இசையமைப்பாளர்களின் கஷ்டமான இசைக் கோர்வையான சிம்போனியை கூட இவர் மிக எளிதாக பியானோவில் வாசித்து உலக அரங்கில் தமிழனாக சாதித்துள்ளார்.

Rahman Lydian
Rahman Lydian

பல சுற்றுப் போட்டிகளை கொண்ட தி வேர்ல்ட் பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு சென்ற லிடியன், தன் திறமையால் இறுதிப் போட்டியில் தன் இரு கைகளாலும் இரு பியானோக்களை அதிவேகத்தில் மீட்டி உலக அரங்கில் சாதித்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழனாக தமிழ்நாட்டுக்கும் லிடியன் பெருமை சேர்த்துள்ளார்.

ilayaraja lydian
ilayaraja lydian

இப்போட்டியில் வெற்றி பெற்ற லிடியன் நாதஸ்வரனுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரு. 7 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்து கொண்டு வென்ற லிடியனுக்கு உலகெங்கிலும் இருந்து பாரட்டுகள் குவிந்து வருகின்றன.