8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.!

0
62

Salem Green ways road – சேலம் 8 வழிச்சாலை திட்டத்டிற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அந்த சாஅலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்ரும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூ உலகின் நண்பர்கள், நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிகு தீர்ப்பு அளிக்கப்படும் என ஏற்கனவே கூறியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை 10.40 மணியளிவில் இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளிடம் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே இந்த திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கூறியதோடு, 8 வழிச்சாலை தொடர்பான தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்த நீதிபதிகள், வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களையும் 8 வாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.இந்த தீர்ப்பு தமிழக அரசுகு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.