மொரட்டுதனமான வெறித்தனம்.! 6 பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பிய பட்லர்.!

0
194

ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

butler
butler

ராஜஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் சிவம் மவி 2-வது ஓவரை வீசினார். இதனை எதிர்கொண்ட ஜோஸ் பட்லர் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி புதிய சாதனை படைத்தார். 2 சிக்சர்கள், 4 போர்கள் என அந்த ஒரே ஓவரில் மட்டும் 28 ரன்களை பட்லர் குவித்தது குறிப்பிடத்தக்கது.

19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனைத் தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி தற்போது களமிறங்கி விளையாடி வருகிறது.