2019 உலக கோப்பையில் தோனியா? பண்ட்டா? தேர்வுக்குழு தலைவரின் நெற்றியடி பதில்

0
97

2019 உலக கோப்பையில் தோனியா? பண்ட்டா? தேர்வுக்குழு தலைவரின் நெற்றியடி பதில்

2019 உலக கோப்பையில் தோனி ஆடுவாரா என்ற சந்தேகத்திற்கு தெளிவான பதிலைக் கூறி, இதுதொடர்பான சர்ச்சைகளுக்கு இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார்.

ஏற்கனவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவரும் நிலையில், தோனி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சொதப்பிவருகிறார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தோனி மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் மீண்டும் சிறப்பாக ஆடி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. அதேபோன்றதொரு பதிலடியையும் இப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

kohli
kohli

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம், அணிக்கு தேவை. கேப்டனுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் போட்டியில் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன. எனவே பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரர் மற்றும் இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் என்ற முறையில் 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது அவசியம். இதே கருத்தைத்தான் முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர்.

அதேநேரத்தில் தோனிக்கு அடுத்த அவரது இடத்தை பிடிக்க ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் உலக கோப்பையில் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்காக அவருக்கு இப்போதிலிருந்தே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. மேலும் தோனியையே நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்கலாம் என்ற குரல்களும் கூட எழுந்தன.

இந்நிலையில் உலக கோப்பையில் தோனி ஆடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதில் குழப்பமே வேண்டாம். அது தோனி தான். அதேநேரத்தில் உலக கோப்பைக்காக இரண்டாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும். அதற்காக தினேஷ் கார்த்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இளம் வீரர் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தையும் பார்க்க விரும்புகிறோம். அதனால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தோனி குறித்த சந்தேகம் வேண்டாம் என்று தோனி உலக கோப்பையில் ஆடுவதை எம்.எஸ்.கே.பிரசாத் உறுதிப்படுத்தியுள்ளார்.