10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்-94.5% தேர்ச்சி.! முதலிடம் எந்த மாவட்டம் தெரியுமா.?

0
144

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

10th result
10th result

இந்நிலையில் இன்று பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். இந்த ஆண்டு மாணவர்கள் 94.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டியவை.

மேலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 5,584. இதில் 5,486 அரசு பள்ளிகளாகும். வழக்கம் போல், மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 3.9 சதவீதம் அதிகமாக உள்ளது. 98.5% தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டம் முதலிடமும், ஈரோடு மாவட்டம் 98.36 சதவீதம் பெற்று 2ஆம் இடமும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீதமும் பெற்று 3ஆம் இடமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.